×

மணப்பாறை அருகே ஜல்லிக்கட்டு போட்டி கோலாகலம்: போட்டியை காண குவிந்த சுற்றுவட்டார பொதுமக்கள்

திருச்சி: மணப்பாறை அருகே போத்தமேட்டு பட்டியில் புனித அந்தோனியார் ஆலய பொங்கல் விழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. திருச்சி மாவட்டம் போத்தமேட்டு பட்டியில் அந்தோனியார் திருவிழாவை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 18-ம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும். இந்த ஆண்டு ஏற்பாடுகள் முழுமை பெறாததால் ஜல்லிக்கட்டு விழா தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டு இன்று அங்குள்ள புனித வியாகுல மாதா தேவாலயத்தின் முன்பு இருக்கும் திடலில் நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில் திருச்சி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, கரூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து கொண்டு வரப்பட்டு இருக்கும் 750 ஜல்லிக்கட்டு காளைகள் பங்கெடுத்து இருக்கிறன. வாடிவாசலில் இருந்து சீறிவரும் காளைகளை அடக்க 300 மாடு பிடி வீரர்கள் களம் காண்கின்றனர். விழா நடைபெறும் பகுதியில் மழை கொட்டி வருகிறது. எனினும் கொட்டும் மழையிலும் போட்டி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.  


Tags : Jallikattu ,Ghulagalam ,Manapara , Manaparai, Jallikattu, Neighborhood, Public
× RELATED பொன்னமராவதி அருகே புதுப்பட்டியில்...